இன்றைய காலகட்டத்தில் பலவிதமான மரணங்கள் ஏற்படுகின்றன. மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய இளம் வயது மரணங்கள் அதிகமாக நடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றங்கள் என கூறலாம். இது தவிர உணவுகளில் கலப்படம் காற்று மாசு போன்ற காரணங்களால் கூட புதுவித நோய்கள் ஏற்பட்டு மரணங்கள் ஏற்படுகிறது.

ஆனால் இதற்கு அடுத்ததாக பார்க்க போனால் சாலை விபத்து போன்ற காரணங்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது. அதையும் தாண்டி கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறிநாய்க்கடி பாதிப்பால் 60 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம். கடந்த ஐந்து ஆண்டுகால ஆய்வு தகவலின் படி 150 நாடுகளில் 60,000 பேர் இந்த வெறிநாய்க்கடியால் ஏற்பட்ட ராபிஸ் நோயால் உயிரிழந்திருக்கின்றனர். அதில் மூன்றில் ஒரு பங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் இருக்கிறது. இந்த ஆய்வு தகவலானது அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
தற்போதைய காலகட்டத்தில் தெருநாய்களின் அட்டகாசம் மிகவும் அதிகமாக இருக்கிறது. வண்டியில் செல்வோரைக் கூட தெருநாய்கள் விடுவதில்லை. குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் என அனைவரையும் தெருநாய்கள் கடித்து பதம் பார்க்கிறது. இதனாலே ராபிஸ் நோய் பரவி வருகிறது.

இந்த ஆய்வு தகவலை பார்த்த பின்பு இந்திய அரசாங்கம் புதிய முடிவை எடுத்ததிருக்கிறது. அது என்னவென்றால் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ராபிஸ் நோய் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த தெரு நாய் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க புதுவித வழிமுறைகளை கையாள ஆலோசனைகள் நடந்து வருகிறது.
