பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டியாளர்கள் யாரும் மக்களைக் கவரவில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. குறிப்பாக, போட்டியாளர்களான பார்வதியும் கம்ருதீனும் நிகழ்ச்சியின் விதிகளை மதிப்பதில்லை என்றும், மைக் அணியாமல் இருப்பது உள்ளிட்ட விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. மைக்கை கழற்றி வைத்ததற்காக பிக்பாஸ் தண்டனை வழங்கியும், அதை அவர்கள் சரியாக ஏற்கவில்லை.
இதற்கு வீட்டுத் தலைவரான அமித்தும், வினோத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கம்ருதீன் மற்றும் பார்வதியை ஊக்குவிப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், கம்ருதீனின் செயல்பாடுகள் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா இல்லாதபோது அவரைப் பற்றிப் பேசிய கம்ருதீன், திவ்யா சண்டையிட்டபோது அவரை ‘வாடி, போடி’ என்று ஒருமையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திவ்யா, தன்னை ஒருமையில் பேச அதிகாரம் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதால், கம்ருதீன் மற்றும் பார்வதிக்கு உடனடியாக ‘ரெட் கார்டு’ கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து, தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள புதிய அரசுக்கும், பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு…
தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 6 முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும்…
தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…