எல்லாம் தப்பு தப்பா பேசுறீங்க.. என் அக்கா ஜீவா இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது.. பவதாரணியின் தாய் மாமா உருக்கம்..

By Sumathi on பிப்ரவரி 4, 2024

Spread the love

இளையராஜாவின் மூத்த மகள் பவதாரணி, சில தினங்களுக்கு முன் கல்லீரல் புற்றுநோயால் இலங்கையில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, இளையராஜா வீட்டில் அஞ்சலி வைக்கப்பட்டு அதன்பின் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில், அவரது அம்மா ஜீவா, பாட்டி சின்னத்தாயி ஆகியோர் நினைவிடங்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பவதாரணியின் திடீர் மறைவு இளையராஜா, கங்கை அமரன் மற்றும் அவர்கள் குடும்பம் சார்ந்த அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக, வேதனையாக இருந்து வருகிறது. இந்நிலையில், இளையராஜாவின் மனைவி ஜீவாவின் தம்பி, பவதாரணியின் தாய்மாமா மூர்த்தி, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

   

   

அவர் கூறியதாவது, எங்கள் குடும்பத்தை பொறுத்த வரை ஜீவாம்மாவுக்கு அடுத்த இடத்தில் பவதாம்பா இருந்தார். அவருக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதை மற்றவர்களிடம் அவர் ஷேர் பண்ணாமல் விட்டுவிட்டார். எல்லோருமே பிஸியான ஆட்களாக அடுத்தடுத்த வேலைகளில் இருந்ததால், அதை அவரால் சொல்ல முடியவில்லை.

 

எனக்கு பவதாவின் கணவர் சபரி போன் செய்து சொன்ன போது கூட இது ஆரம்ப நிலையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இறுதிகட்டத்தில் நோய் முற்றிவிட்டது என்பதுதான் பிறகுதான் தெரிந்தது. ஆனால் எங்கள் அக்கா ஜீவாம்மா இருந்திருந்தால், பவதாம்மா இப்படி சீக்கிரமாக இறந்திருக்க மாட்டார். எப்படியாவது எங்க அக்கா, அவரை ஆரம்பத்திலேயே கவனித்து காப்பாற்றி இருப்பார்.

ஊடகங்களில் பவதாம்மா மறைவு குறித்து தப்பா தப்பான விஷயங்களை, தகவல்களை பரப்பி விடுகின்றனர். தவறான விஷயங்களை பப்ளிசிட்டி செய்கின்றனர். இது மிகவும் வருத்தமளிக்கிறது. தெரிந்தால் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். இல்லை என்றால் விட்டுவிட வேண்டும். இப்படி தப்பு தப்பாக விஷயங்களை சொல்லக் கூடாது. பவதா உடலை கடைசியாக எடுக்கும் போது மயில் போல பொண்ணு ஒண்ணு பாட்டை நாங்கள் யாரும் அங்கு திட்டமிட்டு பாடவில்லை.

தானாகவே அங்கே இருப்பவர்கள் எல்லாம் பாடி விட்டனர். இளையராஜாவின் மூத்த மகள் பவதா என்னும்போது இளையராஜால் துக்கத்தை வெளிக்காட்ட முடியாத அளவுக்கு அவர் உடைந்து போயிருந்தார். இறுதியாக, சென்னையில் தான் அவரது உடலை அடக்கம் செய்ய நினைத்தோம். ஆனால், பண்ணைபுரத்தில் ஜீவாம்மா பக்கத்தில் அடக்கம் செய்யலாம் என முடிவு செய்தது இளையராஜா தான். அவர் முடிவுதான் எல்லாம், என்று கூறியிருக்கிறார் பவதாரணியில் தாய்மாமா மூர்த்தி.

author avatar
Sumathi