8-வது படித்திருந்தாலே போதும்… அக்னிபாத் திட்டத்தில் இணைய அரிய வாய்ப்பு… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on பங்குனி 28, 2026

Spread the love

இந்திய ராணுவத்தில் அக்னிவீரராகப் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய வாய்ப்பு கனிந்துள்ளது. 2026-27 ஆம் ஆண்டிற்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், விண்ணப்பிக்க ஏப்ரல் 1-ஆம் தேதியே கடைசி நாளாகும். இதைக் கருத்தில் கொண்டு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்கள் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். 17.5 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் (01.07.2005 – 01.07.2009 வரை பிறந்தவர்கள்) இதற்குத் தகுதியானவர்கள். 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம். வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வைத் தமிழில் எழுதும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட இளைஞர்களின் ராணுவக் கனவை நனவாக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. உடற்பயிற்சி மற்றும் வகுப்பறைப் பாடங்கள் மட்டுமின்றி, நேரில் வர முடியாதவர்களுக்காக மாலை நேரங்களில் இணையவழிப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மேலும், அனைத்து வட்டங்களிலும் “வெற்றிநடை முகாம்” என்ற சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு 9952594351 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். நாட்டின் பாதுகாப்புப் பணியில் இணைய விரும்பும் இளைஞர்கள், www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் பதிவை உறுதி செய்துகொள்ள வேண்டும்.