அடேங்கப்பா… ஒரு மாம்பழம் வாங்க இத்தனை ஆயிரமா…?! மத்தியப் பிரதேசத்தில் மிரட்டும் அரிய வகை பழம்… மரத்தில் இருக்கும்போதே புக்… அப்படி என்ன ஸ்பெஷல்…?

By Swetha on ஆனி 27, 2026

Spread the love

மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டம், கத்திவாடா பகுதியில் விளையும் “நூர்ஜஹான்” என்ற அரிய வகை மாம்பழம் அதன் பிரம்மாண்டமான அளவிற்காகவும், அசாத்தியமான விலத்திற்காகவும் உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முழுக்க முழுக்க இயற்கை முறையில் வளர்க்கப்படும் இந்த அரிய வகை மாம்பழம், சந்தையில் இருக்கும் அதன் மிகக் கடுமையான பற்றாக்குறை மற்றும் தனித்துவமான சிறப்புகள் காரணமாக மிக உயர்ந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயி பரத்ராஜ் சிங் ஜாதவ் என்பவரின் தோட்டத்தில் விளையும் இந்த மாம்பழம் ஒன்று சுமார் ரூ. 3,800 வரை விற்பனையாகிறது. இதன் சராசரி எடை 3 கிலோ 300 கிராம் என்ற அளவில் இருந்தாலும், சில பழங்கள் 3 முதல் 5 கிலோ வரை கூட வளரும் பிரம்மாண்டத் தன்மை கொண்டவை. இதன் காரணமாகவே இந்த வகை மாம்பழங்கள் “மாம்பழங்களின் ராணி” என்று அன்போடு அழைக்கப்படுகின்றன.

   

இந்த மாம்பழத்தின் விதை மட்டுமே தனியாக 150 முதல் 200 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும் என்பது இதன் மற்றொரு வியக்கத்தக்க சிறப்பம்சமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் பூக்கத் தொடங்கும் இந்த நூர்ஜஹான் மாமரங்கள், ஜூன் மாதத்தில் முழுமையாக விளைந்து அறுவடைக்குத் தயாராகின்றன. இதன் அரிய தன்மையால், பழங்கள் மரத்தில் இருக்கும்போதே மக்கள் முன்பதிவு செய்து வாங்கிச் செல்கின்றனர்.