BREAKING: தவெக கொடுத்த ஒரே புகார்.. எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு….!

By Nanthini on புரட்டாதி 15, 2026

Spread the love

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் அவதூறாகப் பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர் சேகர்பாபு மீதான புகார் குறித்தும் காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தற்போது ஆ.ராசா மீதும் வழக்கு பாய்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.