பிரபுதேவா படத்துல அந்த பாட்டு உருவாக 4 மாசம் ஆகிடுச்சு.. ஒரு வார்த்த கிடைக்கல..AR.ரஹ்மான் பகிர்ந்த தகவல்..

By vinoth

Updated on:

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. இதில் பிரபுதேவா நடிப்பில் ஷங்கர் இயக்கிய காதலன் திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் சார்ட்பஸ்டர் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளன.

இந்த படத்தில் இடம்பெற்ற ஊர்வசி ஊர்வசி பாடல் பற்றி சமீபத்தில் ரஹ்மான் ஒரு சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “ஊர்வசி பாடலை உருவாக்க எங்களுக்கு நான்கு மாதங்கள் ஆனது. ஊர்வசி ஊர்வசி என்ற வார்த்தை வரவேயில்லை. அதனால் பல வரிகளை எழுதிப் பார்த்தோம். நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் அந்த பாடல் எதிர்பார்த்த மாதிரி அமைந்தது” எனக் கூறியுள்ளார்.

அதன் பின்னர் ரஹ்மான் கூட்டணி மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ், மின்சாரக்கனவு ஆகிய திரைப்படங்கள் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஹ்மான் பிரபுதேவா கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தை மனொஜ் என் எஸ் என்பவர் இயக்க உள்ளார்.