Connect with us

AR.ரஹ்மான் பரிந்துரை செய்து படம் வாங்கிக் கொடுத்த ஒரே இயக்குனர் இவர்தான்.. நான்கே படங்கள் காணாமல் போன சோகம்..

CINEMA

AR.ரஹ்மான் பரிந்துரை செய்து படம் வாங்கிக் கொடுத்த ஒரே இயக்குனர் இவர்தான்.. நான்கே படங்கள் காணாமல் போன சோகம்..

தமிழ் சினிமா உலகில் பல இயக்குனர்கள் வாய்ப்புகள் அமைந்தும் அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேற முடியாமல் சறுக்கியுள்ளனர். அப்படி ஒருவர்தான் வெறும் ஐந்தே படங்களை மட்டும் இயக்கிய கே எஸ் ரவி.

கே எஸ் ரவி தென் தமிழக மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி எனும் ஊரில் பிறந்தவர். தமிழ் சினிமாவில் பல வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றிய இவருக்கு முதல் படத்தை இயக்கும் வாய்ப்பைத் தந்தது தெலுங்கு சினிமா.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த ராஜசேகர் மற்றும் அமலா நடிப்பில் இந்த படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் தமிழில் டப் ஆகி ‘எவனா இருந்தா எனக்கென்ன’ என்ற பெயரில் வெளியாகியது. இதையடுத்து 1994 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் ஹான்ஸ்ட் ராஜ் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

   

இதையடுத்து அவர் இயக்கிய திரைப்படம்தான் பிரபுதேவா, மதுபாலா, ஷில்பா ஷெட்டி மற்றும் வடிவேலு நடித்த மிஸ்டர் ரோமியோ. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. பாடல்களை இயக்குனர் ரவி படமாக்கியிருந்த விதமும் ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்தது. இந்த படம் வெளியாகி நல்ல ஹிட்டானாலும் இயக்குனர் ரவிக்கு அடுத்த பட வாய்ப்புக் கிடைக்கவில்லை.

 

நான்கு ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்தார். இந்நிலையில் இவரின் திறமையைப் பார்த்து நம்பிக்கை வைத்த ஏ ஆர் ரஹ்மான், தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்களிடம் இவருக்காக பரிந்துரை செய்தாராம். அப்படி அவருக்குக் கிடைத்தது தான் ‘என் சுவாசக் காற்றே’ திரைப்படம். அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ் மற்றும் ரகுவரன் ஆகியோர் நடித்திருந்த அந்த படத்துக்கும் ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார்.

இந்த படத்திலும் பாடல்கள் பெரியளவில் ஹிட்டானாலும், படம் ஓடவில்லை, அதனால் அதன் பின்னர் அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பே வரவில்லை. 2010 ஆம் ஆண்டு அவர் மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்தினார்.

Continue Reading
To Top