தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ள இவர் முதன்முறையாக அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தார். நடிகர் அஜித்திற்கு தல என்ற பெயர் வர காரணமாகவும் இருந்தவர். இதுவரை தமிழில் இவர் எடுத்த அனைத்து படங்களுமே ஹிட் என்றே கூறலாம்.
அதனை தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இயக்குனராக மட்டும் இல்லாமல் எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளராகவும் சினிமாவில் பயணித்து வருகிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரம்யா என்பவரை 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
பெரும்பாலும் பிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து கொள்வது இல்லை. ஆனால் முருக தாஸ் சற்று வித்யாசமனவராக இருக்கிறார். இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாளும் பெரும்பாலும் தனது மனைவி மற்றும் தனது பிள்ளைகளுடன் தான் செல்வாராம்.
மேலும் இவரது மனைவி ரம்யா மிகுந்த தெய்வ பக்தி கொண்டவராம். அதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில் குளம் என்று தான் சுற்றுவார்களாம். தற்பொழுது இவர் தனது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் உள்ள பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
கடந்த காலத்தின் நினைவுகள் எப்போதும் ஒருவிதமான ஏக்கம் கலந்த இனிமையை நமக்குத் தருகின்றன. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சி இன்று அரங்கேறியுள்ளது. பல தசாப்தங்களாகத் தி.மு.க-வின்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிகழ்த்திக்…
"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!" என்ற வசனத்திற்கு முற்றிலும் புதிய அர்த்தம் கொடுக்கும் வகையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்…
பஞ்சாப் மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது நிகழ்ந்த இந்த உருக்கமான சம்பவம், சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைக் கனக்கச்…
கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் மே 1 அன்று நடைபெற்ற கோயில் திருவிழாக்களின் போது, யானைகள் திடீரென மதம்…