Connect with us

Great escape…! காவேரி குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் எழுப்பப்பட்ட கேள்வி…! என்ன சொன்னார் தெரியுமா…?

CINEMA

Great escape…! காவேரி குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் எழுப்பப்பட்ட கேள்வி…! என்ன சொன்னார் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படம், வெளியாகி வசூல் 600 கோடியை கடந்து விட்டநிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல்வேறு முறையில் கொண்டாடியது.

இதைத்தொடர்ந்து தற்பொழுது மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தலைவர் 171 திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளது. இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், தற்போதைய இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை பற்றிய அப்டைட்களும் இணையத்தில் அவ்வப்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

   

 

இந்நிலையில் ஹைதராபாத் செல்ல சென்னை ஏர்போர்ட் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் காவிரி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அனைத்து கேள்விகளுக்கும் நன்றாகப் பதில் சொல்லி வந்த ரஜினிகாந்த் இந்த கேள்வி வந்ததும் பதில் அளிக்காமல் ஜகா வாங்கினார். அப்படியே அங்கிருந்து கிளம்பினார். எப்போதும் காவிரி பிரச்சினை வரும் போது ரஜினி மவுனமே காக்கும் நிலையில், இப்போதும் அதையே செய்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு கர்நாடகா இடையே எப்போதும் மோதல் போக்கே இருக்கும். இந்தாண்டும் அதற்கு விதி விலக்கு இல்லை. இந்த ஆண்டும் தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைத் தரக் கூடாது என்று கன்னட அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொடுப்பதைக் கண்டித்து அங்கே சமீபத்தில் பந்தும் நடைபெற்றது. தற்பொழுது நடிகர் ரஜினிகாந்தின் இந்த செயலால் தமிழக ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதோ அந்த வீடியோ….

Continue Reading
To Top