Connect with us

அட அப்படியா..! கண்ணதாசனுக்காக பத்திரிக்கை நிறுவனத்தையே இழுத்து மூடிய தயாரிப்பாளர்.. சுவாரஸ்ய சம்பவம்..!

CINEMA

அட அப்படியா..! கண்ணதாசனுக்காக பத்திரிக்கை நிறுவனத்தையே இழுத்து மூடிய தயாரிப்பாளர்.. சுவாரஸ்ய சம்பவம்..!

 

தமிழ் சினிமாவில் தனது பாடல் வரிகளால் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பிரபலம் கண்ணதாசன். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அருகில் உள்ள சிறுகுடல் பட்டி கிராமத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் முத்தையா. சிறுவயதிலேயே எழுத்து மீது இருந்த ஆர்வம் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வந்து ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

   

முதன் முதலில் கிரகலட்சுமி என்கின்ற பத்திரிகையில் நிலஒளியிலேயே என்ற முதல் கதை வெளிவந்தது. கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிக்கை நிறுத்தப்பட்ட பிறகு தான் இவர் மார்டன் ஸ்டேட்டஸ் கதை இலாகாவில் கண்ணதாசன் சேர்க்கப்பட்டார்.

பின்னர் பத்திரிக்கை பணிகளை நிறுத்திவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. ஜுபிடர் நிறுவன தயாரிப்பில் தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தார் கே ராம்நாத். இதுதான் கண்ணதாசன் எழுதிய முதல் பாடல். அதன் பிறகு 30 ஆண்டுகள் திரைத்துறையை ஆளுமை செய்த பெருமை கண்ணதாசனையை சேரும்.

இப்படி சிறப்பாக பாடலை எழுதி வந்த இவருக்காக ஒரு தயாரிப்பாளர் பத்திரிக்கை நிறுவனத்தையே இழுத்து மூடி இருக்கின்றார். கவிஞர் கண்ணதாசன் சண்டமாருதம் என்ற பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நெடுஞ்செழியன் எழுதி இருந்த ஒரு கட்டுரை கவிஞர் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தினால் அதனை சண்டமாருதம் பத்திரிகையில் மறு பிரசோதம் பண்ணலாம் என்று முடிவெடுத்தார் கண்ணதாசன்.

அதனை தயார் செய்வதற்கு பத்திரிக்கையில் இருந்த ஒரு நபரிடம் கொடுத்து கம்போஸ் செய்ய சொல்லி இருக்கின்றார். ஆனால் அவரோ அதனை செய்ய மறுத்து விட்டார். கவிஞர் கண்ணதாசனை பொருத்தவரையில் தன் வேலையில் யாராவது குறுக்கிட்டால் அவருக்கு அப்படி ஒரு கோபம் வரும். அதனால் உடனடியாக ஒரு ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொண்டு மாடர்ன் தியேட்டர் அதிபரான டி ஆர் சுந்தரத்திடம் கொண்டு போய் கொடுத்தார்.

அவரை பொறுத்தவரையில் யார் ராஜினாமா கடிதம் கொண்டு வந்து கொடுத்தாலும், அதனை வாங்கி வைத்துக்கொண்டு சென்று விட்டு வாருங்கள் என்று கூறுவார். ஆனால் கவிஞர் கண்ணதாசன் ராஜினாமா கடிதத்தை பார்த்துவிட்டு டிஆர் சுந்தரம் அப்படி கூறவில்லை, என்ன உன்னுடைய கட்டுரையை அந்த பத்திரிகையில் போட மாட்டேன்னு சொல்லிட்டாங்களா.. விடு அந்த பத்திரிக்கையே மூடி விடுவோம். நீ என்ன பண்ற திரைக்கதை இலாகாவில் போய் சேர்ந்துக்க என்று சொன்னார் டிஆர் சுந்தரம்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top