மீண்டும் பரபரப்பு… கூட்டணி ஆட்சி… அதிமுக – பாஜக கூட்டணியில் வெடித்தது பிரச்சனை… செம ஷாக்கில் இபிஎஸ்…!

By Nanthini on மார்கழி 31, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுக பல வியூகங்களை வகுத்து வரும் நிலையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். அதன்படி NDA கூட்டணியில் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கூறி வருகிறார்கள் . தற்போது அவர்கள் இருவருமே பாஜகவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வரும் நிலையில் கூட்டணி குறித்து அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது.

மறுபக்கம் இபிஎஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில் ஆட்சியைப் பிடிப்பதற்கான பல வியூகங்களை வகுத்து வருகிறார். அதே சமயம் அதிமுக கூட்டணியில் பாஜக கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் சில முரண்பாடுகள் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் NDA கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக ஆட்சியில் அங்கம் வகிக்குமா என்பதே வெள்ளி தலைமை தான் முடிவு செய்யும் என ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். முன்னதாக கூட்டணி ஆட்சி முழக்கத்தால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இது சமீப காலமாக இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அதை மீண்டும் எச். ராஜா தொடங்கி வைத்திருக்கிறார். இதனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் மீண்டும் பிரச்சனை வெடிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.