நாமக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் துறையூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோர வாய்க்காலில் பாய்ந்துள்ளது. இதனால் காரில் இருந்த நிறைமாத கர்ப்பிணியான திலகவதி என்பவர்( 32) பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் இந்த சம்பவத்தில் உயிர் தப்பியுள்ளார்கள். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டுள்ளார்கள். மேலும் விபத்துக்கான காரணம் என்ன குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
