“‘உன் முகம் கேவலமா இருக்கு…” குழந்தை பிறந்த சில மாதங்களில் கொடூரம்…! கோடரியால் கொடூரமாக வெட்டிக் கொன்ற சுமை தூக்கும் தொழிலாளி… அதிர வைக்கும் பகீர் பின்னணி…!!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் “உன் முகம் கேவலமாக இருக்கிறது” எனத் தொடர்ந்து உருவக் கேலி செய்த சக சுமை தூக்கும் தொழிலாளியைக் கோடரியால் கொடூரமாக வெட்டிக் கொன்றுவிட்டு நபர் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த காளிராஜ் (42) என்பவர், அதே சந்தையில் பணியாற்றி வந்த சின்னத்துரை (40) என்பவரைப் பார்க்கும் போதெல்லாம் “உன் முகம் கேவலமாக இருக்கு, பார்க்க முடியலை” எனக் கூறித் தொடர்ந்து உருவக் கேலி செய்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 24 அன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் காளிராஜ், சின்னத்துரையை மற்றவர்கள் முன்னிலையில் கேலி செய்து கீழே தள்ளித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் அவமானமும் ஆத்திரமும் அடைந்த சின்னத்துரை, அக்டோபர் 27 அதிகாலை காய்கறிக் கடையில் தூங்கிக் கொண்டிருந்த காளிராஜைக் கோடரியால் சரமாரியாக வெட்டிக் கொடூரமாகப் படுகொலை செய்தார். பின்னர் கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். உயிரிழந்த காளிராஜுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விளையாட்டாகத் தொடங்கிய உருவக் கேலி கொடூரக் கொலையில் முடிந்த இந்தச் சம்பவம் குறித்துத் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிவபிரசாத் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! மாமியாருடன் தகராறு… தொழிலதிபர் வீட்டில் மர்ம மரணம்… மின்விசிறியில் தொங்கிய மருமகள்… பின்னணியில் என்ன நடந்தது?…!!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள முகுந்த் நகர் குடியிருப்புப் பகுதியில் 29 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்த…

33 seconds ago

“ஸ்டிங் ஆபரேஷன்…” ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்… தமிழகம் முழுவதும் அதிரடி கைது…!!

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் லஞ்சம் மற்றும் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க லஞ்ச…

21 minutes ago

ஐஐடி பம்பாய் மாணவர் சாஹில் வாகோடே தற்கொலை வழக்கு…! சிபிஐ விசாரணை கோரி பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் மனு… மகாராஷ்டிராவில் பரபரப்பு…!!!

மும்பை ஐஐடி மாணவர் சாஹில் வாகோடே தற்கொலை செய்துகொண்ட வழக்கில், காவல்துறையினர் முறையான விசாரணை நடத்தவில்லை எனக் கூறிச் சிபிஐ…

35 minutes ago

“உணவின்றி, கைகள் கட்டப்பட்டு கதறிய சிறுவன்…” சகோதரர்கள் கட்டியதாக பொய் சொன்ன தாய்…. எப்போதும் இதே வேலைதானா…? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

குவாத்தமாலாவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சிறுவன் ஒருவன் தொடர்ச்சியாக இடைவிடாமல் அழுதுகொண்டிருந்த சத்தம் கேட்டு அண்டை வீட்டார் வெளியே வந்து…

56 minutes ago

மனசாட்சியே இல்லையா…? துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி… குற்றவாளிகள் தண்டனையின்றி திரிவதாக வெடித்த சர்ச்சை… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ..!!

பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் உள்ள பிரபல ஹவேலியில் 10 வயது சிறுமி கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள்…

1 மணத்தியாலம் ago

இன்னும் திறக்க கூட இல்ல…! ரூ.8,313 கோடி பட்ஜெட் திட்டம்..! புனே மெட்ரோவில் ஒழுகிய மழைநீர்… திடீர் சர்ச்சைக்கு பொறியாளரின் விளக்கம்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மெட்ரோ சேவையைத் தொடங்கி வைக்க உள்ள நிலையில், புதிய மான்…

1 மணத்தியாலம் ago