ஐஐடி பம்பாய் மாணவர் சாஹில் வாகோடே தற்கொலை வழக்கு…! சிபிஐ விசாரணை கோரி பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் மனு… மகாராஷ்டிராவில் பரபரப்பு…!!!

Spread the love

மும்பை ஐஐடி மாணவர் சாஹில் வாகோடே தற்கொலை செய்துகொண்ட வழக்கில், காவல்துறையினர் முறையான விசாரணை நடத்தவில்லை எனக் கூறிச் சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது பெற்றோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மும்பை ஐஐடியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வாகோடே (20) என்ற மாணவர் கடந்த செப்டம்பர் 18 அன்று தனது அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

சாஹில் சேர்க்கையின்போது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க முயன்ற போதே ஜாதி ரீதியிலான பாகுபாட்டை எதிர்கொள்வாய் என எச்சரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பேராசிரியர் சூர்யநாராயண தூல்லா உள்ளிட்டோர் தேர்வின் போது சாஹிலை ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதே அவனது முடிவுக்குக் காரணம் என பெற்றோர் ரவீந்திரா மற்றும் சோனாலி வாகோடே குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், போவாய் காவல்துறையினர் வழக்கை தீவிரமாக விசாரிக்கவில்லை என்றும், சாஹிலின் தேர்வு விடைத்தாளின் ஒரு பக்கம் மாயமாகியுள்ளதாகவும், நிறுவனத்தின் சார்பில் தவறான தகவல்கள் ஊடகங்களில் பரப்பப்படுவதாகவும் கூறி சாஹிலின் பெற்றோர் வழக்கறிஞர் மூலம் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ அல்லது எஸ்டிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், அன்றைய தினத்தின் சிசிடிவி காட்சிகளைப் பத்திரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் கல்வி வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

விலைவாசி உயர்வை பற்றி கவலையில்லை… தவெக அரசில் கடும் நிர்வாக கோளாறு… முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் மக்கள் நலனில் அக்கறையின்றி இடைத்தேர்தல் பிரசாரத்தை மட்டுமே குறிவைத்து…

3 minutes ago

செம ட்விஸ்ட்..! பெண்ணின் அலறல் சத்தம்… மின்னல் வேகத்தில் பாய்ந்த பொதுமக்கள்… கத்தியுடன் நின்ற கொள்ளையனுக்கு நேர்ந்த கதி…!!

பெங்களூருவின் பரபரப்பான இந்திராநகர் 100 அடி சாலையில் பட்டப்பகலில் ஒரு பெண்ணிடம் நகைப் பறிப்பு முயற்சி அரங்கேறியுள்ளது. அப்பெண்ணின் தங்கச்…

5 minutes ago

திக்.. திக்..! மாமியாருடன் தகராறு… தொழிலதிபர் வீட்டில் மர்ம மரணம்… மின்விசிறியில் தொங்கிய மருமகள்… பின்னணியில் என்ன நடந்தது?…!!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள முகுந்த் நகர் குடியிருப்புப் பகுதியில் 29 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்த…

15 minutes ago

“ஸ்டிங் ஆபரேஷன்…” ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்… தமிழகம் முழுவதும் அதிரடி கைது…!!

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் லஞ்சம் மற்றும் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க லஞ்ச…

36 minutes ago

“உணவின்றி, கைகள் கட்டப்பட்டு கதறிய சிறுவன்…” சகோதரர்கள் கட்டியதாக பொய் சொன்ன தாய்…. எப்போதும் இதே வேலைதானா…? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

குவாத்தமாலாவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சிறுவன் ஒருவன் தொடர்ச்சியாக இடைவிடாமல் அழுதுகொண்டிருந்த சத்தம் கேட்டு அண்டை வீட்டார் வெளியே வந்து…

1 மணத்தியாலம் ago

மனசாட்சியே இல்லையா…? துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி… குற்றவாளிகள் தண்டனையின்றி திரிவதாக வெடித்த சர்ச்சை… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ..!!

பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் உள்ள பிரபல ஹவேலியில் 10 வயது சிறுமி கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள்…

1 மணத்தியாலம் ago