BREAKING: அதிமுகவுடன் கூட்டணி…. இரவோடு இரவாக அறிவித்த பிரபல கட்சி… செம குஷியில் எடப்பாடி….!

By Nanthini on பங்குனி 6, 2026

Spread the love

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் தங்களுக்கு உகந்த அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன; அந்த வகையில், அகில இந்திய சித்த வைத்தியர்கள் சங்கத்தின் நிறுவனப் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி. கருணாமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து, 2026 தேர்தலில் அதிமுக கூட்டணிக்குத் தங்களது சங்கத்தின் முழுமையான ஆதரவை வழங்க உள்ளதாக உறுதியளித்தனர்.

சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கும், மருத்துவர்களின் நலனுக்கும் அதிமுகவின் செயல்பாடுகள் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நிர்வாகிகள், அதிமுக கூட்டணியின் வெற்றிக்காகத் தங்கள் சங்கத்தின் சார்பில் களப்பணி ஆற்றி தீவிரமாகப் பாடுபடுவோம் என்றும் திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளனர்.