இதுதாங்க இந்தியர்களின் உண்மையான பாசம்.. இரவு 11 மணிக்கு இருட்டில் சிக்கிய வெளிநாட்டு பெண்… “நீ எங்க வீட்டுக்கு வா மா” ஏழைக்குடும்பம் செய்த் நெகிழ்ச்சியான செயல்..!!

By Soundarya on பங்குனி 22, 2026

Spread the love

ராஜஸ்தானின் ஒரு சிறிய கிராமத்தில் இரவு 11 மணி அளவில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பயணி தனியாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது பைக் பழுதடைந்து நின்றது. கும்மிருட்டில் ஆள் நடமாட்டமில்லாத அந்தச் சாலையில், எங்கு செல்வது என்று தெரியாமல் அச்சத்திலும் நடுக்கத்திலும் அவர் உறைந்து போயிருந்தார். தனக்கு என்ன நேருமோ என்ற பயத்தில் அவர் தவித்துக்கொண்டிருந்த அந்தச் சூழல் அவருக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

அப்போது அந்தப் பகுதியில் வசித்த ஒரு ஏழ்மையான குடும்பத்தினர், அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு ஓடி வந்தனர். “வெளியே கடும் குளிர் நிலவுகிறது, உள்ளே வா மகளே” என்று பாசத்துடன் அழைத்த அவர்கள், அந்த வெளிநாட்டுப் பெண்ணைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். வெறும் அழைப்போடு நின்றுவிடாமல், அவருக்குச் சுடச்சுட ரொட்டியும் காய்கறி உணவும் வழங்கிப் பசியாற்றினர். மேலும், அந்தப் பெண் பாதுகாப்பாகத் தூங்குவதற்குத் தகுந்த படுக்கை வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

   

மறுநாள் காலை அந்தப் பெண்ணுக்குச் சூடாகத் தேநீர் வழங்கியதோடு மட்டுமல்லாமல், அவரது பழுதான மோட்டார் சைக்கிளையும் சரிசெய்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். வசதி குறைந்த வீடாக இருந்தாலும், அந்த ஏழைக் குடும்பத்தினர் காட்டிய அளவற்ற அன்பும் மனிதநேயமும் அந்தப் பெண்ணை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்தியாவின் விருந்தோம்பல் பண்பையும், ஏழைகளின் உயரிய மனதையும் பறைசாற்றும் இந்தச் சம்பவம் தற்போது நெஞ்சை நெகிழச் செய்துள்ளது.