கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள சேலூரு கிராமத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘சேவா சங்கல்ப அபியானா’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக எம்.எல்.ஏ ஜோதி கணேஷ் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது எம்.எல்.ஏவுடன் கூட்ட நெரிசலில் சென்று கொண்டிருந்த மகாதேவ் என்ற பாஜக தொண்டரின் பேன்ட் பாக்கெட்டைக் கிழித்து, அதில் வைத்திருந்த ரூ.60,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். பணத்தைச் சுருட்டுவதற்குள் அதனை கவனித்ததால் திருட்டு முயற்சி நல்வாய்ப்பாக முறியடிக்கப்பட்டு பணம் காப்பாற்றப்பட்டது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
