ஔரங்காபாத்தில் உருக்கமான சம்பவம்…! குடும்பத்தினர் உயிரிழந்த நிலையிலும் வீட்டின் முன் காத்திருந்த செல்ல நாய்… நாள் முழுவதும் ஒலித்த ஊளைச்சத்தம்… கண்கலங்க வைக்கும் பதிவு…!!

By Devi Ramu on ஆவணி 27, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் பகுதியில் உள்ள காவ்டியா தோங்கர் பகுதியில் குனால் சந்த்குடே மற்றும் அவரது பெற்றோர் உயிரிழந்த சோகச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், அவர்கள் வளர்த்து வந்த ‘ஷெரு’ என்ற செல்ல நாய், குடும்பத்தினர் வெளியே சென்று திரும்பாத நிலையில் நாள் முழுவதும் வீட்டின் உள்ளேயே பூட்டப்பட்டுக் கிடந்துள்ளது. காவல் துறையினர் வழக்கு விசாரணை செய்வதற்காக வீட்டைத் திறக்கும் வரை அந்த நாய் தொடர்ச்சியாக ஊளையிட்டபடி கதவின் அருகே காத்திருந்துள்ளது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அன்று குனாலின் தாய்வழி தாத்தா பாபன்ராவ் கபுடே, ஷெருவை ஔரங்காபாத் செல்லப்பிராணிகள் ஆர்வலர்கள் அமைப்பிடம் ஒப்படைத்தார். அங்கு அந்த நாய்க்குத் தேவையான பராமரிப்பு மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்பத்தினர் இறந்த நிலையிலும் செல்லப் பிராணி காட்டிய இந்த அன்பும் பாசமும் அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.