ஓவர் நைட்டில் ஒபாமா ஆகுறது இதானோ..? ரூ.7,500 கோடிக்கு சொந்தக்காரரான நபர்.. அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டோன்னு கொட்டிருச்சு..!!

By admin on ஐப்பசி 15, 2023

Spread the love

அமெரிக்காவில் 45 நகரங்களில் பவர்ஃபால் ஜாக்பாட் என்னும் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த டிக்கெட்டின் விலை இரண்டு டாலர்கள். ஒரு சுழற்சியில் 250 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

இந்நிலையில் கலிபோர்னியாவை சேர்ந்த ஒருவருக்கு 1.73 பில்லியன் டாலர் பரிசுத்தொகை விழுந்தது. பவர்பால் லாட்டரியில் வெற்றி பெற்ற எண்கள்(22,24,40,52,64) வெளியிடப்பட்டு பரிசுத்தொகை பெற்றவரின் பெயரும் அறிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு 643.7 மில்லியன் என 30 ஆண்டுகளுக்கு வெற்றியாளர் அந்த தொகையை வாங்கிக் கொள்ளலாம்.

   

   

வரி பிடித்தம் செய்தது போக மீதமுள்ள அனைத்து தொகையும் வெற்றியாளருக்கு சொந்தமாகும். அந்த லாட்டரி சீட்டை விற்பனை செய்த மதுபான கடைக்கு ஒரு மில்லியன் ஊக்கத்தொகை பரிசளிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அமெரிக்காவில் சூதாட்டம் மற்றும் லாட்டரி மூலம் கிடைக்கும் பரிசு தொகைக்கு வரி செலுத்துவது கட்டாயம்.

 

இதனால் வரி தொகை போக மீதமுள்ள பணத்தை வெற்றியாளர் பெற்றுக் கொள்ளலாம். கடந்த ஆண்டு நவம்பரில் 2.04 மில்லியன் பரிசுத்தொகை விழுந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில் 1.73 பில்லியன் பரிசு தொகை விழுந்துள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே லாட்டரி கிடைத்த இரண்டாவது மிகப்பெரிய தொகை இதுதான். இந்திய மதிப்பில் இது 7,500 கோடியாகும்.