சமீபத்தில் பெண் ஒருவர் சாட்ஜிபிடி கொடுத்த ஆலோசனையின் மூலமாக ஒரு மாதத்தில் 10 லட்சம் ரூபாய் கடனை அடைத்தார். அதேபோல தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த 52 வயதான யூடியூப்பர் கோடி குரோன் என்பவர் சாட்ஜிபிடி வழங்கிய ஆலோசனை மூலம் 46 நாட்களில் 11 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார் .அவருடைய உடலுக்கு ஏற்ப உணவு பட்டியல், உடற்பயிற்சி, தூக்க நேரம் ஆகியவற்றை சாட்ஜிபிடி பரிந்துரை செய்துள்ளது. அந்த ஆலோசனையின் படி உணவு முறை, உடற்பயிற்சி, தூங்கும் நேரம் ஆகியவற்றை மாற்றிக்கொண்ட இவர் 46 நாட்களில் 95 கிலோவாக இருந்த இவர் உடல் எடையை 83 கிலோவாக குறைத்துள்ளார்.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டுள்ளார் . காலை உணவாக நான்கு முட்டைகள், சர்க்கரை சேர்க்கப்படாத ஓட்ஸ், இரவு உணவாக கால் கப் மல்லிகை அரிசி, ஆலிவ் எண்ணெய், பழம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டாராம். சர்க்கரை, பால் பொருள் மற்றும் அனைத்து பதப்படுத்தப்பட்ட பொருட்களையும் குறைத்துள்ளார். தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு செல்போன் மற்றும் கணினி பயன்பாட்டை தவிர ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் இரவு தூங்கியுள்ளார். சீரான உறக்கத்திற்கு பின்பும் உறங்கும் முன்பும் தேன் அருந்தியுள்ளார். தினமும் சுமார் 4 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார். தினமும் அதிகாலை 4:30 மணிக்கு எழுவதை பழக்கமாக்கிக் கொண்ட இவர் வாரத்திற்கு நாள் ஆறு நாட்கள் காலை 6 மணிக்கு 60 முதல் 90 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்துள்ளார். உடல் எடை குறைப்பதற்காக எந்த ஒரு மருந்தும் ஊசியும் பயன்படுத்தவில்லை.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…