சார் நீங்க ரொம்ப கிரேட்…! விபத்து நடந்தும் மனிதநேயம் காட்டிய நபர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on பங்குனி 23, 2026

Spread the love

பெங்களூருவில் நடைபாதையில் அஜாக்கிரதையாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஒருவர், அங்கிருந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். பொதுவாக இது போன்ற நேரங்களில் கடும் வாக்குவாதம் அல்லது கைகலப்பு நடப்பது வழக்கம். ஆனால், இந்த விபத்தில் காரின் உரிமையாளர் காட்டிய அபரிமிதமான பொறுமை இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் கோபப்படாமல் அமைதியாகக் காரை விட்டு இறங்கி, கீழே விழுந்த அந்த நபருக்கு உதவி செய்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம் மற்றும் நிதானத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், நடைபாதையில் வாகனங்களை ஓட்டுவது பாதசாரிகளின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என்றும், இத்தகைய விதிமீறல்கள் கடுமையான தண்டனைக்குரியவை என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மனிதநேயத்தை முன்னிறுத்திச் செயல்பட்ட அந்தக் கார் உரிமையாளருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.