தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு, மர்ம நபர் ஒருவர் காரில் முகத்தை மறைத்தபடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக – அதிமுக இடையிலான கூட்டணி குறித்த பேச்சுகள் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், விஜய்யைச் சந்திக்கச் சென்ற அந்த மர்ம நபர் யார் என்பது குறித்த கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகின்றன.
#WATCH | முகத்தை மறத்தபடி பட்டினப்பாக்கம் இல்லத்திற்குள் சென்ற நபர்#SunNews | #Chennai | #Pattinappakkam pic.twitter.com/WtU8Pf9Rql
— Sun News (@sunnewstamil) May 8, 2026
இந்தச் சந்திப்பு குறித்த வீடியோ வைரலாகி வருவதால், தவெக தரப்பில் ஏதேனும் முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழப்போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக, ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை எட்ட இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில், மற்ற முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் யாராவது ரகசியப் பேச்சுவார்த்தைக்காகச் சென்றிருக்கலாமோ எனப் பல்வேறு தரப்பினரும் யூகித்து வருகின்றனர். இருப்பினும், இந்த மர்ம நபர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
