நியூயார்க் சுரங்கப்பாதையில் ஜாக்கெட் அணிந்திருந்த நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஜாக்கெட்டின் வெளிப்பகுதியிலுள்ள வெளிப்படையான (Transparent) பிளாஸ்டிக் அடுக்குகளுக்குள் நூற்றுக்கணக்கான உயிருள்ள கரப்பான் பூச்சிகள் நெளிந்து கொண்டிருப்பதைக் கண்டு சக பயணிகள் அருவருப்பில் உறைந்து போயினர். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ, “மிகவும் கொடூரமானது” மற்றும் “அருவருப்பானது” என பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
🚨JUST IN: On the latest episode of WTF NEW YORK, a man was spotted at a subway station wearing a jacket that has multiple pockets with LIVE COCKROACHES INSIDE!
You couldn't pay me to go to NYC. pic.twitter.com/shGUJvxl5t
— AmericanPapaBear™ (@AmericaPapaBear) April 10, 2026
பொதுமக்கள் நடமாடும் இடத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் எனப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். அதேசமயம், இது ஏதேனும் வினோதமான ஆடை அலங்கார முயற்சியாக (Fashion statement) இருக்கலாம் அல்லது கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்யப்பட்ட செயலாக இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். எது எப்படியிருந்தாலும், அந்த வீடியோவைப் பார்ப்பவர்களுக்கே ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தக் காட்சிகள் அமைந்துள்ளன.
