#image_title
வெளிநாட்டை விடவும் இந்திய மக்கள் மிகவும் உணர்வுபூர்வமானவர்கள். எல்லாவற்றிற்குமே அதிக சென்டிமென்ட் பார்ப்பவர்கள். அது செல்லப்பிராணிகளாக இருந்தாலும் சரி பொருள்களாக ஆனாலும் சரி அதை குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே கருதுவர்.
சிலர் செல்லப்பிராணிகளாக நாய் பூனை கிளி எலி முயல் வாத்து கோழி ஆடு என பலவற்றை வளர்ப்பார்கள். அவற்றிற்கு கேக் வெட்டுவதும் வளைகாப்பு கொண்டாடுவதும் போன்ற பல சம்பவங்கள் நடப்பதை நாம் சமூகவலைத்தளங்களில் பார்த்திருப்போம்.
இந்நிலையில் தற்போது உலகில் எங்குமே நடந்திராத ஒரு வினோத சம்பவம் குஜராத்தில் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் குஜராத்தை சேர்ந்த ஒரு நபர் தான் 12 வருடங்களாக உபயோகித்து வந்த அதிர்ஷ்டமான காரை ஆயுள் முடிந்து விட்டது என்று கூறி அதற்கு இறுதி சடங்குகள் நடத்தி மண்ணில் புதைத்து இருக்கிறார்.
15 அடியில் தோண்டப்பட்ட குழியில் மாலை போட்டு பூஜைகள் செய்து அந்த காரை புதைத்திருக்கிறார். இதை அங்கு உள்ள பொதுமக்களும் அனைவரும் என்ன இப்படி செய்கிறார் என்று அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரும் அந்த நபரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…