“4000 ரூபாய் டிரஸ்.. 100 குரங்குகள் காலி…” விவசாயியின் தந்திரத்தைப் பார்த்து வியக்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on பங்குனி 18, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி பயிர்களைச் சேதப்படுத்தும் குரங்குகளின் அட்டகாசத்தால் பெரும் அவதிக்குள்ளாகினர். நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக வந்து விவசாயிகளின் உழைப்பை வீணடித்து வந்த நிலையில், தர்மபீர் என்ற விவசாயி ஒரு புதுமையான யோசனையைக் கையாண்டுள்ளார். இதற்காக சுமார் 4,000 ரூபாய் செலவில் கரடி போன்ற உடையை வாங்கிய அவர், அதை அணிந்துகொண்டு வயல்வெளிகளில் வலம் வரத் தொடங்கியுள்ளார்.

கரடி வேடமிட்டு வயலில் நடமாடும் தர்மபீரைப் பார்த்து நிஜமான கரடி என அஞ்சி குரங்குகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றன. இந்த வித்தியாசமான முயற்சியைப் பின்பற்றி மேலும் சில விவசாயிகளும் தற்போது கரடி உடையணிந்து தங்கள் பயிர்களைப் பாதுகாத்து வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் புத்திசாலித்தனமான மற்றும் வேடிக்கையான ‘ஜுகாட்’ நுட்பம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது இணையவாசிகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

   

 

View this post on Instagram

 

A post shared by ABP News (@abpnewstv)