அய்யோ போச்சே… பையில ரூ 3 லட்சம் பணம் இருந்துச்சே… பேருந்தில் கதறிய பயணி… அடுத்த நொடி நடந்த பரபரப்பு திருப்பம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

Spread the love

சாத்நகரைச் சேர்ந்த தெலங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நடத்துனர் சரிதா, பயணி ஒருவர் தவறவிட்ட ரூ 3 லட்சம் ரொக்கப் பணத்தைப் பத்திரமாக ஒப்படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். சாத்நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜஹாங்கீர், ஹஜ் யாத்திரை செல்வதற்காகத் தன் மனைவியுடன் ஹைதராபாத்திற்குப் பேருந்தில் பயணம் செய்தார். அஃப்சல்குஞ்சில் இறங்கி நாம்பள்ளி நோக்கிச் சென்றபோதுதான், பணப் பையைப் பேருந்திலேயே விட்டுச் சென்றது அவருக்கு தெரியவந்தது.

பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையைக் கண்ட நடத்துனர் சரிதா, உடனடியாக ஓட்டுநர் நரசிம்ஹுலுவிடம் தகவல் தெரிவித்தார். இருவரும் அந்தப் பணத்தைப் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு, பயணி திரும்பி வருவார் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தன் பையைத் தேடி பதற்றத்துடன் பேருந்து நிலையத்திற்குத் விரைந்து வந்த ஜஹாங்கீரிடம், சரிதாவும் நரசிம்ஹுலுவும் ரூ 3 லட்சம் ரொக்கத்தையும் அப்படியே ஒப்படைத்தனர்.

https://twitter.com/Bavazir_network/status/2096577786911854643/video/1

நடத்துனர் சரிதாவின் இந்த நேர்மையையும் கடமையுணர்வையும் பாராட்டி தெலங்கானா போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். சரிதா மற்றும் ஓட்டுநர் நரசிம்ஹுலுவின் இந்த முன்மாதிரியான செயல், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நேர்மைக்கும் பொறுப்புணர்விற்கும் சிறந்த சான்றாக அமைந்ததோடு, பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Swetha

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

2 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

3 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago