பிக் பாஸை விட்டு வெளியில் வந்த விசித்ராவுக்கு செம்ம சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் & நண்பர்கள்.. வைரலாகும் வீடியோ..

By Deepika

Updated on:

பிரபல தொலைக்காட்சில்  ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை விசித்ரா நேற்று  குறைந்த வாக்குகளைப்பெற்று  வெளியேறினார். இவர் சுமார் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். திருமணமான பிறகு சினிமாவை விட்டு விளகிருந்த விசித்ரா  20 ஆண்டுகளுக்கு பிறகு குக்கு வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து  கொண்டார் . இவர்  பல பிரபல நடிகர்களுடன்  நடித்திருந்தபோதிலும்  இவருக்கு மக்கள்  மத்தியில் நல்ல வரவேற்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்தது  குக்கு வித் கோமாளி  நிகழ்ச்சிதான்.

இந்நிலையில் இதனை தொடர்ந்து இவருக்கு   பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் தனது  குடும்பத்தின் ஆதரவோடு கலந்துகொண்டார்  விசித்ரா.  இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில்     இவர்  அதிக அளவு ரசிகர்களை ஈர்த்தாலும் பின்பு  அவருக்கும் சக போட்டியாளர்களுக்கும்  இடையேயான கருத்து வேறுபாடு இவருக்கு  ஏற்ற  தாழ்வுகளை தந்தது. அதிலும்   தினேஷ்  திருமண வாழ்க்கையை பற்றி அவர் பேசியது.  மாயாவுடனான நட்பு அவருக்கு மக்கள் மத்தியில் வெறுப்பை  ஏற்ப்படுத்தியது    இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்த நிலையில் பல போட்டியாளர்கள் வெளியே சென்றுள்ளனர். இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டது .

   

7  போட்டியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில்  இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று விசித்ரா வெளியேற்றப்பட்டார்.   பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த விசித்ரா இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் அவர் கணவர் மற்றும் மகன்களுடன்  பார்ட்டி கொண்டாடிய இனிமையான தருணத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும்  அவருக்கு வாழ்த்து கூரி  வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ammu Ramachandran (@ammuramachandran)

author avatar
Deepika