சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, வேலைக்குச் செல்லும் பலரது தூக்கத்தைக் கெடுத்துள்ளது. ஒரு சாதாரண பானிபூரி விற்பனையாளர் மாதம் சுமார் 90,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்தர நிறுவனங்களில் (MNC) ஏசி அறையில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களை விட, தெருவோரம் பானிபூரி விற்பனை செய்பவர்கள் அதிக லாபம் ஈட்டுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவில் பகிரப்பட்டுள்ள கணக்கின்படி, அந்த பானிபூரி விற்பனையாளர் ஒரு நாளைக்குச் சராசரியாக 100 பிளேட் பானிபூரிகளை விற்பனை செய்கிறார். ஒரு பிளேட் 30 ரூபாய் வீதம் கணக்கிட்டால், ஒரு நாளைக்கு 3,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதன் மூலம் மாதத்திற்கு 90,000 ரூபாய் வரை அவர் சம்பாதிக்கிறார். மிக முக்கியமாக, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலான வெறும் 6 மணி நேர உழைப்பிலேயே இந்தத் தொகையை அவர் ஈட்டுவது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தி வைரலானதைத் தொடர்ந்து இணையதளவாசிகள் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். “இது எனது சி.டி.சி-யை (CTC) விட அதிகம்” என்று கார்ப்பரேட் ஊழியர் ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். அதேசமயம், 90,000 ரூபாய் என்பது மொத்த வருமானம் மட்டுமே என்றும், இதில் மூலப்பொருட்களுக்கான செலவு போக லாபம் குறைவாகவே இருக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், வரி செலுத்தத் தேவையில்லாத இத்தகைய சிறு தொழில்களில் கிடைக்கும் லாபம் பல பட்டதாரிகளை விட அதிகமாக இருப்பது பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…