பெற்றோர்களே உஷார்..! கல்லை விழுங்கிய ஒரு வயது குழந்தை மூச்சுத்திணறி பலி… கேரளாவில் அதிர்ச்சி..!!

Spread the love
கேரள மாநிலம் சங்கரம்குளம் பகுதியில், வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது சிறுவன் தற்செயலாகக் கல்லை விழுங்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குழந்தை, சங்கரம்குளம் பள்ளிக்கரை பகுதியைச் சேர்ந்த மஹ்ரூப் – ருமானா தம்பதியரின் மகன் அஸ்லம் நூஹ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை விளையாடிக்கொண்டிருந்தபோது சிறுவன் ஒரு கல்லை எடுத்து விழுங்கிய நிலையில், அது தொண்டையில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது.
உடனடியாகச் சிறுவன் சங்கரம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோட்டக்கலில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். இருப்பினும், திங்கள்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குழந்தையின் தொண்டையில் கல் சிக்கியதால் ஏற்பட்ட கடுமையான சுவாசப் பாதிப்புகளே மரணத்திற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

13 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

39 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

50 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

1 மணத்தியாலம் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

1 மணத்தியாலம் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

1 மணத்தியாலம் ago