மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மூத்த குடிமக்களிடம் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டார் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இன்றும் முதியோர் உதவித் தொகை வாங்குபவர்களைக் கேளுங்கள் எம்.ஜி.ஆரின் அருமை பெருமைகளை அவ்வளவு அழகாக எடுத்துரைப்பர். அந்த அளவிற்கு தனது தாய்க்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரோ அதே அளவிற்கு மற்ற முதியோர்களிடமும் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

#image_title
“உலகம் சுற்றும் வாலிபன்” படத்தின் படப்பிடிப்பிற்காக விழுப்புரம் அருகே ஒரு பிரமாண்ட செட் போடப்பட்டு இருந்தது.இதை பார்வையிட நடிகரும் அந்த படத்தின் இயக்குனருமான எம்.ஜி.ஆர் தனது நீல நிற அம்பாசிடர் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எம்.ஜி.ஆர் தனது உதவியாளரிடம் தனக்கு மிகவும் பசிப்பதாகவும் அருகில் உணவகம் இருந்தால் ஏதாவது சாப்பிட வாங்கி வரும் படி கூறுகிறார். உதவியாளர் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு பாட்டியிடம் பனங்கிழங்கு,வேர்க்கடலை, சீனிமுட்டாய் வாங்கிக் கொண்டு கடைசியாக 50 பைசா மதிப்புள்ள பொருட்களுக்கு 10 ரூபாய் கொடுத்தார். பாட்டி மீதி சிலரை கொடுக்க முட்பட “பரவாயில்ல பாட்டி நீங்களே வைச்சுக்குங்க” என்று கூறி விட்டு உதவியாளர் வந்து விடுகிறார்.

#image_title
அந்த பண்டங்களின் சுவை எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்து விட்டது. மறுநாள் எம்.ஜி.ஆர் வெகு சீக்கிரமாகவே படப்பிடிப்பிற்கு கிளம்பி அதே பழைய இடத்தில வண்டியை நிறுத்தி உதவியாளரிடம் “போய் பனங்கிழங்கும் வேர்க்கடலையும் வாங்கிட்டு வாங்க “என்று கூறுகிறார். இது பல நாட்களாக தொடர்கிறது. உதவியாளரும் வாங்கி வரும் போதெல்லாம் பாட்டிக்கு 10 அல்லது 20 அல்லது 50 ரூபாயை கொடுக்கிறார் ஆனால் அந்த பண்டங்களின் மதிப்பு 50 பைசா மட்டுமே ஒரு நாள் இதே போல் உதவியாளர் அங்கு போகும் போது கடையில் பாட்டி இல்லை உடல்நிலை சரி இல்லாமல் வீட்டுக்குள் படுத்திருக்கிறார்.

#image_title
இந்த செய்தியை எம்.ஜி.ஆரிடம் உதவியாளர் கூற”உடனே போய் அந்த பாட்டிக்கு என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு வாங்க” என்று சொல்லி அனுப்புகிறார். பின்னர் பாட்டியிடம் நலம் விசாரித்து விட்டு எம்.ஜி.ஆருக்குத் தான் இந்த உணவு என்று கூற, பாட்டி முகத்தில் அத்தனை பொலிவு.
“அந்த தங்கமா? அந்த மகராசன நான் பார்க்கணும். என்று கூறி கார் இருக்கும் இடத்திற்கு வருகிறார்அந்தப் பாட்டி. அப்போது எம்.ஜி.ஆர் அவருக்கு 5 நூறு ரூபாய் தாளை கொடுக்க.
அதற்குப் பாட்டி, “அய்யா உன் முகத்தை பார்த்ததே போதும் .உன்ன கட்டிபுடுச்சு ஒரு முத்தம் தரட்டுமா? என்று கேட்க எம்.ஜி.ஆர் உடனே காரில் இருந்து இறங்கி பாட்டியை அணைத்து ஆரத்தழுவி பாசத்தோடு முத்தமிட பாட்டி உருகி போய் கண்கலங்கி விடுகிறார். இந்நிகழ்வுக்குப் பின் “எம்.ஜி.ஆர் நடித்த அந்த படம் ஏன் இன்னும் வரல” என்று பாட்டி அருகில் இருந்தவர்களிடம் கேட்க “பண தட்டுப்பட்டால் எம்.ஜி.ஆரால் அந்த படத்தை வெளியிட முடியவில்லை” என்று கூறினர்.

#image_title
இதனை கேட்ட பாட்டி சில நாட்களில் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் வீட்டுக்கு சந்திக்க போகிறார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் உணவருந்தி கொண்டிருக்க உதவியாளர் விழுப்புரம் கடை பாட்டி வந்திருப்பதை பற்றி கூறியவுடன் கையை கூட கழுவாமல் துண்டை எடுத்து உடம்பை போர்த்தி கொண்டு உடனே வெளியே வந்து பாட்டியை பார்த்து அணைத்து கொண்டு என்ன விஷயம் என்று கேட்க, அந்தப் பாட்டி தனது சுருக்கு பையில் இருந்து 1800 ரூபாயை எடுத்து பாட்டி எம்.ஜி.ஆரிடம் கொடுத்து “படம் நின்னு போச்சாம். பண கஷ்டத்துல இருக்கியாம். அந்த படம் தியேட்டர்ல வரணும் கண்ணு.செய்யி தங்கம்”என்று கூற கண்கலங்கி விட்டாராம் எம்.ஜி.ஆர். பின்பு ஒரு வாரம் கழித்து அதே பாட்டியின் ஊருக்கு சென்று மணலில் உட்கார்ந்து அந்த பாட்டியுடன் சேர்ந்து திரை அரங்கத்தில் படத்தை கண்டு கழித்தாராம் இந்த முதியோர்களின் கடவுள்.
