அட கடவுளே! ஓடும் காட்சியில் தொண்டைக்குள் பாய்ந்த மூக்குத்தி… படப்பிடிப்பு தளத்தில் உறைந்துபோன படக்குழு… மரண பயத்தில் அலறிய பிரபல நடிகை…!!

Spread the love

திரைப்பட படப்பிடிப்புகளில் சண்டைக் காட்சிகள் அல்லது வாகன விபத்துகள் நடப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், பிரபல பாடகியும் நடிகையுமான ஷெஹ்னாஸ் கில்லுக்கு சமீபத்தில் படப்பிடிப்புத் தளத்தில் சற்று வித்தியாசமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அவர் தற்போது நடித்து வரும் ‘இஷ்க்னாமா’ திரைப்படத்திற்காக, பழங்காலத்து ராணிகள் அணியும் கனமான ஆடைகள் மற்றும் நகைகளை அணிந்துகொண்டு ஓடி வருவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அவரது மூக்குத்தி கழன்று நேராக அவரது வாய்க்குள் விழுந்து தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது.

தொண்டையில் மூக்குத்தி சிக்கியதால் மூச்சு விட முடியாமல் ஷெஹ்னாஸ் கடுமையாகத் திணறினார். அவருக்கு என்ன ஆனது என்று புரியாமல் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த பதற்றமான சூழ்நிலையில், அவருடன் நடித்துக் கொண்டிருந்த சக நடிகர் சௌரப் சச்தேவா உடனடியாகச் செயல்பட்டு ஷெஹ்னாஸின் முதுகில் தட்டி உதவி செய்தார். அவரது துரித செயலால் தொண்டையில் சிக்கியிருந்த மூக்குத்தி வெளியேறியது; இதனால் அங்கு நிலவிய பெரும் பதற்றம் முடிவுக்கு வந்து அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

தனக்கு நேர்ந்த இந்த விபத்து குறித்து பலரும் தொடர்ந்து கேட்டு வந்ததால், அந்த விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை ஷெஹ்னாஸ் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதறவைக்கும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். நல்லவேளையாகப் பெரிய அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்று ஆறுதல் அடைந்த ரசிகர்கள், படப்பிடிப்புகளில் கவனமாக இருக்கும்படி அவருக்கு அன்பான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Gayathri

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

4 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

4 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

4 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

4 மணத்தியாலங்கள் ago