“உபி டூ ஓசூர்.. குறுக்கே நின்ற குடும்பம்!”… காதலுக்காகத் துணிந்த வடமாநிலப் பெண்… ஆத்திரத்தில் பெற்றோர் செய்த அந்த ‘கொடூர’ காரியம்… சினிமா கிளைமாக்ஸையும் மிஞ்சிய பயங்கரம்…!!!

Spread the love

ஓசூரில் காதல் திருமணம் செய்துகொண்ட மகளை, அவரது குடும்பத்தினரே பெப்பர் ஸ்பிரே (Pepper Spray) அடித்து கடத்திச் சென்ற துணிச்சலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கோவிந்த பிரியா (21), ஓசூரைச் சேர்ந்த சூர்யா (26) என்பவரை கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், ஓசூரை விட்டு வெளியேறித் தங்கள் சொந்த ஊருக்கே சென்றுவிட்டனர்.

சொந்த ஊரில் உறவினர்களின் கேள்விகளால் ஆத்திரமடைந்த கோவிந்த பிரியாவின் தாய் சகுந்தலா மற்றும் அவரது சகோதரர்கள், மீண்டும் ஓசூர் வந்து மகளைக் கடத்தத் திட்டமிட்டனர். நேற்று பிற்பகல் சூர்யாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவர்கள், அங்கிருந்தவர்கள் மீது திடீரென பெப்பர் ஸ்பிரே அடித்து நிலைகுலையச் செய்தனர். கண் எரிச்சலில் அவர்கள் தவித்துக் கொண்டிருந்ததைப் பயன்படுத்தி, கோவிந்த பிரியாவை வலுக்கட்டாயமாக ஒரு காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்துச் சூர்யா அளித்த புகாரின் பேரில், ஓசூர் அட்கோ போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்து கடத்தல்காரர்களைத் தீவிரமாகப் பின்தொடர்ந்தனர். இறுதியில், கர்நாடக மாநிலம் ராமோஅள்ளி பகுதியில் மறைந்திருந்த கடத்தல் கும்பலைச் சுற்றி வளைத்து, கோவிந்த பிரியாவைப் பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாகப் பெண்ணின் தாய், சகோதரர்கள் மற்றும் கார் ஓட்டுநர் என நான்கு பேரைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஒருவரைத் தேடி வருகின்றனர். சொந்த மகளையே சினிமா பாணியில் பெப்பர் ஸ்பிரே அடித்துக் கடத்திய இந்தச் சம்பவம் ஓசூர் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

மும்பையில் பயங்கரம்… பள்ளிப் பேருந்து மீது வேரோடு சாய்ந்த மரம்… 11 வயது சிறுவன் பலியான பரிதாபம்….!

மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…

7 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய பைக்… மகாராஷ்டிராவில் கொடூரம்….!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…

7 மணத்தியாலங்கள் ago

நாத்தனாருக்கு 10% சொத்து, 50 கோடி வரதட்சணை… கல்யாண சந்தையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… வைரலாகும் சின்மயியின் ஆவேசப் பதிவு…!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…

8 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… ஒரு போட்டோவிற்காக இந்த கொடூர சண்டை…? நடுரோட்டில் பாக்ஸிங் செய்து கொண்ட நேபாள இளைஞர்கள்…!”

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…

8 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா… இதென்ன அநியாயம்..?! குப்பை வண்டியில் கட்டி 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பசுவின் சடலம்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…

8 மணத்தியாலங்கள் ago

ஐந்து நாட்கள், 30 கொடூரர்கள்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அந்த 5 நாள் நரகம்… ராஜஸ்தானை உலுக்கிய கொடூரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…

8 மணத்தியாலங்கள் ago