சமூக வலைதளங்களில் கவர்ச்சியான ஆண்களின் படங்களைப் பதிவிட்டு, “சலுகை விலையில் வாடகை காதலன் வேண்டுமா?” என்ற பெயரில் பரவி வரும் விளம்பரங்கள் தற்போது தீவிரமாக டிரெண்டாகி வருகின்றன. காபி அருந்த ரூ.499, சினிமா செல்ல ரூ.1,249 எனத் தொடங்கும் இந்த மோசடி ஆஃபர்கள், ஆகஸ்ட் 1-ம் தேதியை முன்னிட்டு 50 சதவீத தள்ளுபடி என்ற பெயரிலும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. இணையவழியில் இளம் பெண்களையும் சிறுமிகளையும் கவரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரங்கள் அனைத்தும் சைபர் குற்றவாளிகளின் ஆபத்தான வலை என்பதை ஹைதராபாத் காவல் துறை உறுதிப்படுத்தி எச்சரித்துள்ளது.
இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்பி முன்பின் தெரியாத நபர்களை நேரடியாகச் சந்திக்கச் செல்வது மிகப்பெரிய ஆபத்தில் முடிவடையும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர். காதல் மற்றும் நட்பின் பெயரில் ஏமாற்றி, உரையாடல்களின் போது தந்திரமாகச் சேகரிக்கப்படும் தொலைபேசி எண்கள், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களைக் கொண்டு மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த மோசடிக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டறிந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பெற்றோர்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். குழந்தைகள் ஸ்மார்ட்போனில் என்ன பார்க்கிறார்கள், சமூக ஊடகங்களில் யாரிடம் பேசுகிறார்கள், வெளியே யாரைச் சந்திக்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒருவேளை இதுபோன்ற இணையவழி மோசடிகளில் யாரேனும் சிக்கினாலோ அல்லது சந்தேகத்திற்குரிய பதிவுகளைக் கண்டாலோ, அச்சப்படாமல் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணையோ அல்லது cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தையோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…