24 கிராம மக்கள் ஒன்று கூடி நடத்திய தடியடி திருவிழா…‌இந்த வினோத சம்பிரதாயத்தால் 70 பேர் மண்டை உடைப்பு…

By admin on ஐப்பசி 13, 2024

Spread the love

பல ஊர்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஊருக்கு ஏற்ப ஒவ்வொரு முறைகளில் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். வினோத சம்பிரதாயங்களும் நடைபெறும். ஆனால் இந்தியாவில் ஒரு கோவிலில் தடியடி செய்து திருவிழா நடத்தி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வினோத திருவிழா வேறு எங்கும் பார்த்திருக்க முடியாது. இந்த வினோதத் திருவிழா ஏன் நடத்தப்படுகிறது அதனால் என்ன ஆனது என்பதை பற்றி இனி காண்போம்.

   

கர்நாடக மாநிலத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள தேவாரகாட்டு மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மல்லேஸ்வர சுவாமி மலைக்கோயில். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று இங்கு உற்சவம் நடக்கிறது. இந்த உற்சவ திருவிழாவின்போது தடியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த தடியடி திருவிழாவில் மக்கள் ம்பு தடிகளை வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர். இது அங்கே வழக்கமாக பின்பற்றப்படும் பாரம்பரிய சடங்கு என்று கூறுகின்றார்கள்.

   

ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே கம்புகளால் தாக்கிக்கொள்ளும் சம்பவத்தால் பலர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் கலவரம் ஏற்படுவதால் இந்த திருவிழாவின் போது ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்படுவர். சாமியை எந்த ஊருக்கு அழைத்துச் செல்வது என்று பாரம்பரிய முறைப்படி சண்டையிட்டு வெல்பவர்கள் மல்லேஸ்வரர் சாமியை அழைத்துச் செல்வார்களாம்.

 

அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்களும் போலீசாரமும் எவ்வளவோ இதுபோல் செய்ய வேண்டாம் என்று கூறியும் பாரம்பரிய முறைப்படி செய்து ஆகவேண்டும் என்று மக்கள் அடம்பிடித்து இந்த தடியடி திருவிழாவை நடத்துகின்றனர். ஏராளமான போலீசார் இந்த வருட திருவிழாவிற்கு குவிக்கப்பட்டிருக்கின்றனர். இருந்தாலும் இந்த தடியடி திருவிழாவில் தற்போது 70 பேருக்கு மேல் மண்டை உடைந்தது மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. தெய்வ நம்பிக்கை இருக்கலாம் இது போன்ற மூடநம்பிக்கைகளை கொண்டு இருக்கும் மக்களை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.