ஐயோ… நடிகர் சூர்யா குடும்பத்திற்கு வந்த புது பிரச்சனை… கற்பனைக்கு எல்லை இல்லையா?… சிவக்குமாரின் ரியாக்ஷன் என்ன?…

By Swetha on ஆடி 30, 2026

Spread the love

சோசியல் மீடியாவில் தினமும் சினிமா, அரசியல் எனப் பல தீவிரமான விவாதங்கள் நடந்து வந்தாலும், சில நேரங்களில் நெட்டிசன்களின் எல்லை இல்லாத கற்பனை திறனால் உருவாகும் மீம்கள் இணையவாசிகளைப் பெரிதும் ரசிக்க வைக்கின்றன. அந்த வகையில், தற்போது நடிகர் சூர்யா – ஜோதிகா குடும்பத்தை மையமாக வைத்து வைரலாகும் ஒரு கமெண்ட் ஸ்கிரீன்ஷாட் அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளது. “நான் ஜோதிகாவாக மாற ஆசைப்படுகிறேன்” என்று ஒரு நெட்டிசன் பதிவிட, அதற்குப் போட்டியாக மற்றவர்கள் சூர்யாவாகவும், அவரது மகனாகவும் கூடு விட்டு கூடு பாய்வதாகத் தங்களின் கற்பனையைத் தட்டிவிட்டுள்ளனர்.

ஆனால், இந்தச் உரையாடலின் உச்சகட்ட நகைச்சுவையாக அமைந்தது கடைசியாக வந்த ஒரு கமெண்ட் தான். “நீங்கள் நினைத்தது போல நடந்தால், நான் சிவக்குமார் உடம்புக்குள் புகுந்து விடிய விடிய மகாபாரதம் பேசி உங்களைத் தூங்க விடாமல் செய்து விடுவேன்” என்று ஒருவர் மிரட்டும் பாணியில் போட்ட கமெண்ட் இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் “கற்பனைக்கும் ஒரு அளவு இல்லையா!” என்று ஜாலியாகக் கலாய்த்து வருவதுடன், ஒருவேளை இந்தச் செய்தியைப் பார்த்தால் மூத்த நடிகர் சிவக்குமார் என்ன எதிர்வினை ஆற்றுவாரோ என்ற எதிர்பார்ப்பிலும் இந்த ஸ்கிரீன்ஷாட்டை அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள்.

   

மற்றொரு புறம், நடிகர் விஜய் முழு நேர அரசியலில் களம் கண்ட பிறகு, அவரைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ், விஷால் மற்றும் தனுஷ் எனப் பல திரைப் பிரபலங்களும் நற்பணிகள் மற்றும் அரசியல் விருப்பங்கள் குறித்துப் பேசத் தொடங்கி, இணையம் காரசாரமான விவாதங்களால் சூடேறியுள்ளது. இப்படிப்பட்ட தீவிரமான அரசியல் மற்றும் சினிமா சர்ச்சைகளுக்கு இடையே, நெட்டிசன்களின் இந்த ‘கூடு விட்டு கூடு பாயும்’ தமாஷ் கமெண்ட்கள், சோசியல் மீடியா பயனாளர்களுக்கு ஒரு நல்ல மன அழுத்த நிவாரணியாக அமைந்து வைரலாகி வருகிறது.