2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில், விவசாயிகளின் உரிமைகளை முன்னிறுத்தி “விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சி” எனும் புதிய அரசியல் கட்சி உதயமாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு விவசாய கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்த இயக்கத்தின் மாநிலத் தலைவராக பரிமணம் பொறுப்பேற்றுள்ளார்.
நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற எழுச்சியான நிகழ்வில் கட்சியின் அதிகாரப்பூர்வக் கொடியை அவர் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே கட்சியின் முதன்மை நோக்கம் என்றும், நடைபெறவுள்ள தேர்தலில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களம் இறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
