உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் மிலக் கானம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாட்டை உலுக்கியுள்ள ஒரு பகீர் படுகொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் கார் வாஷிங் சென்டர் நடத்தி வந்த 30 வயதான நவஜோத் சிங் என்ற இளைஞர் தனது கடையில் வழக்கம் போலப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்றில் முகமூடியுடன் வந்த மர்ம நபர்கள் திடீரெனக் கடையில் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற நவஜோத் சிங்கை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துச் சென்ற அந்த கும்பல், அவரது தலைப்பாகையைக் கீழே தள்ளிவிட்டு கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நவஜோத் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகின்றன.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, கொல்லப்பட்ட நவஜோத் சிங்கின் தந்தை அளித்த புகாரில், தனது மகனுக்கும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கும் இடையே இருந்த குடும்பத் தகராறு மற்றும் திருமண ரீதியான பிரச்சனைகளே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடிவருவதுடன், முன்விரோதம் மற்றும் குடும்பச் சண்டை ஆகிய இரு கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…