வாழ்க்கையை மாற்றிய படம்…! கிண்டலுக்கு பயந்து காடுகளில் அலைந்து திரிந்த வாலிபர்…. மாற்றுத்திறனாளி மகனுக்காக போராடிய தாய்…. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி கதை…!

By Devi Ramu on ஆவணி 26, 2026

Spread the love

ருவாண்டா நாட்டைச் சேர்ந்த சான்சிமேன் எல்லி என்ற வாலிபர், மூளை வளர்ச்சியைக் பாதிக்கும் ‘மைக்ரோசெபாலி’ என்ற குறைபாட்டுடன் பிறந்தவர். இதனால் பேசவும் மனிதர்களோடு இயல்பாகப் பழகவும் சிரமப்பட்ட அவர், கிராம மக்களின் உருவக் கேலி மற்றும் கிண்டல்களால் பயந்து அடிக்கடி காட்டுப் பகுதிகளுக்குத் தப்பிச் சென்று தனியாக அலைந்து திரிந்தார். இதனால் இணையத்தில் அவர் “நிஜ உலக மோக்லி” என அழைக்கப்பட்டார்.

5 குழந்தைகளை இழந்த பிறகு பிறந்த எல்லியை , அவரது தாய் வறுமையிலும் மிகுந்த அன்போடு வளர்த்து வந்தார். இந்நிலையில், எல்லி மற்றும் அவரது தாயாரின் வாழ்க்கை குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் இணையத்தில் வெளியாகி கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது.

   

இதையடுத்து உலகம் முழுவதிலுமிருந்து மனிதநேயமிக்க மக்கள் அவருக்குப் நிதியுதவி வழங்கினர். தற்போது எல்லி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்று வருகிறார். மக்களால் புறக்கணிக்கப்பட்டு வந்த ஒரு வாலிபருக்கு அன்பு, அங்கீகாரம் மற்றும் கல்வி வாய்ப்பு அளித்ததால் அவரது வாழ்க்கையே முழுமையாக மாறியுள்ளது.