ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடுப்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த சிராஞ்சீவி என்பவரின் 27 வயது மனைவி ஷோபாவுக்கு, குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி நாயக் என்பவருடன் தவறான போன் கால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இன்ஸ்டாகிராம் வாயிலாகத் தொடர்பில் இருந்த இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இவர்களது விவகாரம் கணவர் சிராஞ்சீவிக்குத் தெரியவரவே, அவர் மனைவியைக் கண்டித்துத் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி, ஆரம்பத்தில் கணவனைக் கொல்லத் திட்டமிட்ட போதிலும், பின்னர் வீட்டை விட்டு ஓடிப்போக முடிவு செய்தனர்.
கணவன் மற்றும் பிள்ளைகளைக் கைவிட்டு ஓடிய ஷோபா, குப்பம் பகுதியில் உள்ள கோயிலில் பாலாஜியைத் திருமணம் செய்துகொண்டார். இதனிடையே மனைவி காணாமல் போனது குறித்துச் சிராஞ்சீவி அளித்த புகாரின் பேரில் தேடி வந்த நிலையில், இருவரையும் கண்டுபிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தார். விசாரணையில், தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக ஷோபா மிரட்டியதால் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்ததாக பாலாஜி கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உன்னாவ் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்ஷா…
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில், நகைக்கடையில் பணியாற்றி வந்த 22 வயது பெண் வாணிஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.…
டேராடூனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 'டாக்டர் ரியால்டர்' என்ற நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில், சொந்தமாகத்…
வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில், ஓய்வுபெற்ற ஆசிரியரான கணேஷ் சக்ரவர்த்தி மற்றும் அவரது மனைவி பிரீதிலதா, பிள்ளைகளான ஆகாமி, பிரியம் ஆகிய…
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்க நகைகள் வாங்குவதற்காக பல ஆண்டுகளாகச் சேமித்த சுமார் 12…
ஹைதராபாத் பசவதாரகம் நகரைச் சேர்ந்த 24 வயது ஆசிரியை ஒருவர், தனது கணவர் மீது பிலிம்நகர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான…