பாகிஸ்தானின் குஜ்ராத் மாவட்டம் அலம்கிர் பகுதியில், திருமணமான பெண் ஒருவர் தனது காதலனுடன் இணைந்து தனது மூன்று குழந்தைகளையே கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சித்ரா பஷீர் என்ற திருமணமான பெண், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பாபர் ஹுசைன் என்பவரைச் சந்தித்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய தகாத உறவாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், சித்ரா தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி சண்டையிட்டுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது.
இந்தத் திருமணம் குழந்தைகள் இருக்கும் வரை நடைபெறாது என சித்ரா பஷீர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து காதலனுடன் சேர்ந்து மூன்று குழந்தைகளையும் கொல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தடையாக இருந்ததால், குழந்தைகளுக்குத் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து மயக்கமடையச் செய்து இந்தக் கொலையை செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து கணவர் புகார் அளித்த நிலையில் மனைவியே குழந்தைகளை கொலை செய்தது அம்பலமானது. லாகூரிலிருந்து 200 கி.மீ தொலைவில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாகிஸ்தான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
