சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் ஒருவர், செல்போன் பயன்பாட்டினால் ஏற்பட்ட விபரீதத்தால் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேரு மற்றும் ஹசீனா தம்பதியரின் மகனான ரியாஸ்கான், அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடனும், விடுமுறை நாட்களிலும் படிப்பில் சிறிதும் கவனம் செலுத்தாமல், இந்த சிறுவன் எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக்கிடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதீத செல்போன் மோகத்தால், அவரது பெற்றோர் அடிக்கடி அவரை எச்சரித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று மாலையில் வழக்கம்போல் நீண்டநேரமாக செல்போனைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனை, அவரது தாய் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கடுமையாகக் கண்டித்துள்ளார்.
தாயின் இந்த கண்டிப்பால் மிகுந்த மனமுடைந்த அந்த மாணவன், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனியறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த துயர சம்பவம் குறித்து ஆத்தூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த மூத்த சகோதரருக்கு தொழில் தொடங்குமாறு அறிவுரை வழங்கிய நிலையில் ஏற்பட்ட தாகராறில், அவரைத்…
இந்தியாவின் 'சிலிகான் வேலி' என்று அழைக்கப்படும் பெங்களூரு, ஐடி துறையின் மையமாக மாறுவதற்கு முன்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் உகந்த…
தமிழ்நாட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் எளிதில் ஆவணங்களைப் பதிவு செய்யும் நோக்கிலும், வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அரசு…
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை, விஷம் கலந்த மீன் குழம்பு கொடுத்து கொடூரமாக கொலை…
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் மீது இளைஞர்கள் சிலர் ஒருதலைபட்சமாகக்…
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, முதியவர்கள்…