தமிழ்நாட்டில் மிக முக்கியமான மாவட்டங்களில் ஒன்றும் அனைவரும் விரும்பக்கூடிய ஒரு மாவட்டம் தான் நீலகிரி மாவட்டம். இது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்று மலையாலே இந்த நீலகிரி மாவட்டம் என்ற பெயர் பெற்றது. இந்த நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் எனப்படும் ஊட்டி ஆகும்.
தமிழ்நாட்டில் அனைவரும் விரும்பக்கூடிய மற்றும் செல்லக்கூடிய ஒரு சுற்றுலா தளம் தான் ஊட்டி. இந்த நீலகிரி மாவட்டத்தில் உயரமான மலை தொட்டபெட்டா ஆகும். குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவக்காடு இந்த மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரங்கள் ஆகும். இந்திய தேசத்தில் அழகாக இருக்கும் ஒரு மலை சுற்றுலா தளம் ஊட்டி ஆகும்.
பார்ப்பதற்கும் உணர்வதற்கும் அனுபவிப்பதற்கும் ரசிப்பதற்கும் ஏராளமான பச்சை பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பது தான் ஊட்டி. ஆண்டு முழுவதும் குளிர்ந்த முதல் மிதமான வானிலை கொண்டிருக்கும் ஊட்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து ஏராளமான பயணிகளை இங்கு ஈர்க்கிறது. ரோஜா தோட்டம், பொட்டானிக்கல் கார்டன் குறிப்பாக ஊட்டியின் டாய் டிரெயின் மிகவும் பிரபலம் வாய்ந்தது ஆகும்.
தற்போது சீசன் காலமானதால் உதகை நோக்கி பல சுற்றுலா பயணிகள் வர தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் தான் அங்கு ஒரு ஆச்சரியம் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்ததால் ஊட்டிக்கு செல்லும் மலைப்பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சி உருவாகி புதிதாக நிறைய நீர்வீழ்ச்சிகள் இருப்பது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அந்த வழியாக காரிலும் பைக்கிலும் செல்லும் பயணிகள் மற்றும் மக்கள் நின்று புகைப்படம் எடுத்து இந்த இயற்கை காட்சியை ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.