சாகசம் இப்படியா முடியும்?… 56 மீட்டர் உயர கிரேன்… வானில் பறந்தபோது நேர்ந்த விபரீதம்… மின்கம்பியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய ரஷ்ய வீரர்…!!

By Gayathri on கார்த்திகை 11, 2026

Spread the love

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் வான்வழியே பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக அங்கு சென்ற உயரழுத்த மின் கம்பிகளில் சிக்கி அந்தரத்தில் தொங்க நேரிட்டது. மண்டி-பாடேர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் நிகழ்ந்த இந்த விபரீத சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர், உள்ளூர் நிர்வாகத்தினருடன் கைகோர்த்து தீவிர மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். சுமார் 56 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்ட கிரேன் மற்றும் பலமான கயிறுகளைப் பயன்படுத்தி, அந்த நபரை எவ்வித காயங்களுமின்றி பத்திரமாக மீட்டனர். சுயநினைவுடன் நலமாக இருந்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.