திடீர் டெல்லி பயணம்.. அண்ணாமலைக்கு காத்திருக்கும் ‘மெகா’ பொறுப்பு?… அதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்..!

By Nanthini on சித்திரை 8, 2026

Spread the love

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயணத்தின் போது அவருக்கு கட்சியில் தேசிய அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்குவது குறித்து மேலிடம் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

அதே வேளையில், மக்களவைத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், தேர்தல் முடியும் வரை தமிழக பாஜகவை அமைப்பு ரீதியாக வலுவாக வழிநடத்த ஒரு தனிக் குழுவை அமைப்பது தொடர்பாக, கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் நிதின் நபினைச் சந்தித்து அவர் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தகவல்கள் கசிகின்றன. அண்ணாமலையின் இந்த டெல்லி விசிட், தமிழக அரசியலில் பாஜகவின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் உட்கட்சி மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.