உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள காகா (Khaga) பகுதியில் வளர்ப்பு நாய்க்காகத் திருமணம் நின்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரயாக்ராஜில் இருந்து வந்த மணமகன் வீட்டாரை வரவேற்றுத் திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அதிகாலை 4 மணி அளவில் மணமேடையில் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணப்பெண் வளர்த்த நாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை தரப்பைச் சேர்ந்த ஒருவர் அந்த நாயை அடித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் வீட்டார் தட்டிக் கேட்க, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி பெரும் கலவரமாக மாறியது.
இந்த மோதலில் இரு தரப்பினரும் நாற்காலிகள் மற்றும் தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் மணப்பெண் தரப்பைச் சேர்ந்த மூவர் பலத்த காயமடைந்தனர். தனது வளர்ப்பு நாயை அடித்தது மட்டுமல்லாமல், தனது குடும்பத்தினரையும் தாக்கிய மாப்பிள்ளை வீட்டாருடன் வாழ முடியாது என மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில், ஒருவருக்கொருவர் கொடுத்த அன்பளிப்புகளைத் திருப்பித் தருவதென முடிவு செய்யப்பட்டு, திருமணம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. வளர்ப்பு பிராணி மீதான பாசத்திற்காகப் பெண் ஒருவர் திருமணத்தையே நிறுத்திய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடைக்காலத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக உச்சந்தலையில் ஏற்படும் பாதிப்புகள் முடி உதிர்வை அதிகரிக்கின்றன. இதற்குத் தீர்வாக…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட நேரம் 'வார் ரூமில்' முகாமிட்டிருந்தது…
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றம் மற்றும் சேர்க்கை பல்வேறு யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், மே 1, 2026 முதல்…
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் அல்லகட்டா பகுதியில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கணவனின்…
வானியல் ரீதியாக சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணைவதை புதாதித்ய ராஜயோகம் என்று அழைக்கிறோம். இந்த அபூர்வ சேர்க்கை தற்போது…
தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…