சண்டிகரைத் தொடர்ந்து, பெங்களூருவிலும் ‘ஜாம்பி டிரக்’ (Zombie Drug) போதைப் பொருள் பயன்பாடு குறித்த சந்தேகத்தை எழுப்பும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர் பொது இடத்தில் எவ்வித அசைவும் இன்றி, ஒரு சிலையப் போல பல மணி நேரம் நின்றுகொண்டிருப்பது பதிவாகியுள்ளது. பார்ப்பதற்கு ஒரு ஜாம்பியைப் போலவே தோற்றமளிக்கும் அந்த நபரின் வினோதமான செயல், அப்பகுதியில் சென்றவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ‘சைலாசின்’ (Xylazine) அல்லது ஜாம்பி டிரக் எனப்படும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர்கள், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற உணர்வின்றி நீண்ட நேரம் சிலையாய் உறைந்து போவார்கள். தற்போது பெங்களூருவிலும் இது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது, இந்தியாவில் இந்த அபாயகரமான போதைப் புழக்கம் அதிகரித்து வருகிறதோ என்ற அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…