சீனாவில் மது போதையில் உணவு சாப்பிட்ட நபர் ஒருவர், எதிர்பாராத விதமாக 12 சென்டிமீட்டர் நீளமுள்ள சாப்ஸ்டிக் குச்சியை விழுங்கிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த விபத்தின்போது, அறுவை சிகிச்சைக்காகக் கழுத்துப் பகுதியை வெட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதால் பயந்துபோன அவர், சிகிச்சையைத் தவிர்த்து அக்குச்சியுடனேயே வாழ்ந்து வந்துள்ளார்.
நீண்ட காலத்திற்குப் பிறகு தொண்டையில் வலி அதிகரித்ததால் மீண்டும் மருத்துவமனையை நாடிய அந்த நபருக்கு, தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த நீளமான குச்சி அகற்றப்பட்டுள்ளது. போதையில் செய்த ஒரு சிறு தவறுக்காக, ஒரு மனிதன் ஒரு மரக்குச்சியுடன் எட்டு ஆண்டுகள் வலியோடு வாழ்ந்த இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
