பாம்பா..? பொம்மையா..? மரண விஷமுள்ள நாகப்பாம்பை.. காலால் மிதித்து விளையாடிய நபர்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ… நெட்டிசன்கள் அலறல்…!!

By Swetha on ஆனி 19, 2026

Spread the love

பொதுவாகப் பாம்பின் பெயரைக் கேட்டாலே பலருக்கும் பயம் வந்துவிடும். ஆனால், சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் கொடிய விஷமுள்ள நாகப்பாம்புடன் சாதாரணமாக விளையாடும் காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வயல்வெளியின் ஓரத்தில் நின்று கொண்டு, அந்தப் பாம்பு வெளியே வர முயலும் போதெல்லாம் அவர் எந்தவொரு பயமும் இல்லாமல் அதனைத் தன் காலால் லேசாகத் தட்டி மீண்டும் உள்ளேயே விரட்டுகிறார்.

அந்தப் பாம்பு பலமுறை வயலை விட்டு வெளியேறி தப்பிக்க முயன்றாலும், அந்த நபர் ஒரு பொம்மையுடன் விளையாடுவதைப் போல மிகவும் அசாதாரணமாகத் தன் கால்களால் அதனைத் தடுத்துக்கொண்டே இருக்கிறார். அவரது முகத்தில் எந்தவொரு பயமோ அல்லது பதற்றமோ இல்லாதது காண்போரைக் வியப்படையச் செய்கிறது.

   

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பலரும் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தாலும், பாம்பு போன்ற ஆபத்தான உயிரினங்களுடன் இப்படி விளையாடுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.