முதலைகள் நிறைந்த ஆற்றில் ஒரு நபர் எவ்வித பயமுமின்றி குதித்து, ராட்சத முதலையின் தாடைகளை வெறும் கைகளால் கையாளும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த நபர் நேராக முதலையின் அருகே சென்று அதன் கொடூரமான தாடைகளைத் திறப்பதையும், அதற்கு உணவளித்துவிட்டு பின்னர் ஒரு பொம்மை போல அந்த முதலையைத் தூக்கி வீசுவதையும் கண்டு அருகில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 27 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் இது உண்மையா அல்லது செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்று விவாதித்து வருகின்றனர். புளோரிடா போன்ற பகுதிகளில் இது போன்ற சாகசங்கள் சகஜம் என்று ஒரு தரப்பினர் கூறினாலும், இது முற்றிலும் மனித சக்தியால் சாத்தியமற்றது என மற்றொரு தரப்பினர் பதிவிட்டுள்ளனர். இருப்பினும், இது 2016-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட உண்மை வீடியோ என்றும், அந்த நபர் நீண்ட காலமாக முதலைகளுக்கு இவ்வாறு உணவளித்து வருகிறார் என்றும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
